நாம் பிரிவின்றி எல்லோரும் உறவாக வேண்டும்
நாம் பகை இன்றி எல்லோர்க்கும் சமாதானம் வேண்டும்
அமைதி கொடு இறைவா
பாசமும் நீயே பந்தமும் நீயே
பயிரும் நீயே உயிரும் நீயே
தூய்மையில் இருப்பாய் துரோகரை அழிப்பை
குண்டு வைப்பவரை விரட்டி ஓட செய்து அமைதி கொடு
உள்ளத்தில் நல்லவரை உயர்ந்தேத்த அமைதி கொடு
பள்ளிக்கு வந்தவரை படிக்க வைக்க அமைதி கொடு
தீவைக்கும் துரோகிகளை தொருதிட அமைதி கொடு
வறுமையில் வதங்காமல் வாழவைக்க அமைதி கொடு
நிலநடுக்கம் இல்லாமல் எப்போதும் அமைதி கொடு
ஊர் எங்கும் சந்தோஷம் உண்டாக அமைதி கொடு
அன்னியர் தீ எரிய விடவே மாட்டேன்
என்னிடம் வந்தவரை எந்நாளும் மதிப்பேன்
ஏற்றங்கள் பெற்றுவிட எந்நாளும் படிப்பேன்
உப்பின்றி வாழ்பவர்க்கு உணவுடி மகிழ்வேன்
நான் உயிரோடு இருக்கும் வரை தாய் மண்ணை காப்பேன்
ஐக்கிய நாடு கொள்கைகளை நான் விரும்பி ஏற்பேன்
அதன் வலி நாடுயர நாளெல்லாம் உழைப்பேன்
இறைவா அமைதி கொடு
PS: This is a song conceived by a Teacher of Tamil when I was at school. Hats Offs Sir!!
PS: This is a song conceived by a Teacher of Tamil when I was at school. Hats Offs Sir!!
No comments:
Post a Comment